மின்னல் பாய்ந்து காளை மாடு பலி
ஊத்துக்கோட்டை: மின்னல் பாய்ந்து காளை மாடு பரிதாபமாக உயிரிழந்தது. பென்னலுார்பேட்டை அடுத்த நெய்வேலி கிராமத்தில் வசித்து வருபவர் கோடீஸ்வரன், 38; விவசாயி. இவர், நேற்று முன்தினம் தனக்கு சொந்தமான காளை மாட்டை, வயல்வெளியில் கட்டியிருந்தார். அப்போது, பலத்த இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. மழை நின்றபின் காளை மாட்டை அழைத்து வர சென்றபோது, மின்னல் பாய்ந்து மாடு பரிதாபமாக உயிரிழந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து, பென்னலுார்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.