உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கூரை இல்லாத பஸ் நிறுத்தம்: பயணியர் கடும் அவஸ்தை

கூரை இல்லாத பஸ் நிறுத்தம்: பயணியர் கடும் அவஸ்தை

மப்பேடு:பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை கூரை இல்லாததால் பயணியர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். கடம்பத்துார் ஒன்றியம் மப்பேடு ஊராட்சியில், காவல் நிலையம் அருகே அமைக்கப்பட்ட பயணியர் நிழற்குடை, 2013ம் ஆண்டு, தண்டலம் - அரக்கோணம் நெடுஞ்சாலை விரிவாக்கத்தின் போது அகற்றப்பட்டது.அதன்பின், 2016ம் ஆண்டு பணிகள் நிறைவடைந்தது. தற்போது, ஒன்பது ஆண்டுகளாகியும் நிழற்குடை அமைக்கவில்லை. கடந்த 2024ம் ஆண்டு பயணியர் அமர்வதற்கு இருக்கைகள் அமைத்த ஊராட்சி நிர்வாகம் கூரை அமைக்கவில்லை.இதனால், பேருந்துக்காக காத்திருக்கும் பகுதிவாசிகள் மற்றும் மாணவ -- மாணவியர் வெயில், மழையில் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை