மேலும் செய்திகள்
பயணியர் நிழற்குடை அமைக்க வலியுறுத்தல்
14-Sep-2025
வெங்கத்துார்,:திருமழிசை -- ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் உள்ள வெங்கத்துார் பேருந்து நிறுத்தத்தில், பயணியர் நிழற்குடை இல்லாததால் பகுதி மக்கள் மற்றும் மாணவ - மாணவியர் அவதிப்பட்டு வருகின்றனர். கடம்பத்துார் ஒன்றியத்திற்கு உட்பட்டது வெங்கத்துார் ஊராட்சி. இந்த பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி, வெங்கத்துார், வெள்ளேரிதாங்கல், பாப்பரம்பாக்கம் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் மற்றும் பள்ளி, கல்லுாரி மாணவ --- மாணவியர், திருவள்ளூர் மற்றும் பிற பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இந்த பேருந்து நிறுத்தத்தில் இருந்த நிழற்குடை முறையான பராமரிப்பு இல்லாததால், சேதமடைந்து இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இதனால், வெயில் மற்றும் மழை நேரங்களில் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, பேருந்து நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வெங்கத்துார், வெள்ளேரிதாங்கல், பாப்பரம்பாக்கம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
14-Sep-2025