உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மோசடி புகாரில் விசாரணைக்கு வராத நடிகை நீதிமன்றத்தை நாட தொழிலதிபர் முடிவு

மோசடி புகாரில் விசாரணைக்கு வராத நடிகை நீதிமன்றத்தை நாட தொழிலதிபர் முடிவு

பூந்தமல்லி:சென்னை கொளப்பாக்கத்தை சேர்ந்தவர் ராஜ்கண்ணன், 47; தொழிலதிபர். இவர், சில நாட்களுக்கு முன், பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.புகாரில், 'சின்னத்திரை நடிகை ரெகானா பேகம் ஏற்கனவே திருமணம் ஆனதை மறைத்து, என்னை மணந்து கொண்டார். என்னிடம், 20 லட்சம் ரூபாய் வரை பணம், நகைகளை பெற்று மோசடி செய்துள்ளார்' என, குற்றம் சாட்டியிருந்தார்.புகார் குறித்த விசாரணைக்கு ஆஜராகும்படி, இருவருக்கும் பூந்தமல்லி போலீசார் சம்மன் அனுப்பினர்.இந்நிலையில், ராஜ்கண்ணன் தன் வழக்கறிஞர்களுடன், பூந்தமல்லி காவல் நிலையத்தில் நேற்று ஆஜரானார். அப்போது, தன்னிடம் இருந்த ஆவணங்கள், ரெகானாவிற்கு பணம் அனுப்பியது, அவருடன் மொபைல் போனில் பேசிய உரையாடல் ஆகியவற்றை போலீசாரிடம் காண்பித்தார்.ஆனால், நடிகை ரெகானா பேகம் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதையடுத்து, இந்த புகார் தொடர்பாக, நீதிமன்றத்தை நாடி, நடவடிக்கை எடுத்துக்கொள்வதாக ராஜ்கண்ணன் எழுதி கொடுத்துவிட்டு சென்றார்.அப்போது, அவர் அளித்த பேட்டி:ரெகானா பேகம் என்னை எமாற்றி திருமணம் செய்து மோசடி செய்துள்ளார். இதுபற்றி கேட்டால், என்னை மிரட்டி வருகிறார். கோவையிலும் ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி, அவரிடமும் நிலம் மற்றும் கார் வாங்கியுள்ளார்.என் மீது வழக்குகள் இருப்பதாக கூறுகின்றார். என் மீது ஒரு வழக்கு தான் உள்ளது. அந்த வழக்கும் முடியும் நிலையில் உள்ளது. ரெகானா பேகத்தின் மீது, மான நஷ்ட வழக்கு தொடர உள்ளேன். விரைவில் நீதிமன்றத்தை நாடி, இதற்கு தீர்வு காணப்படும்.இவ்வாறு, ராஜ்கண்ணன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி