உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அங்கன்வாடியில் காலிப்பணியிடம் விண்ணப்பிக்க அழைப்பு

அங்கன்வாடியில் காலிப்பணியிடம் விண்ணப்பிக்க அழைப்பு

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள பணியாளர் மற்றும் உதவியாளர் பணிக்கு, வரும் 23ம் தேதிக்குள் விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகளின் கீழ் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 301 அங்கன்வாடி பணியாளர் மற்றும் 68 உதவியாளர் பணிக்கு நேரடி நியமனம் செய்யப்பட உள்ளது. அங்கன்வாடி பணியாளருக்கு 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றோரும், உதவியாளர் பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றோரும் விண்ணப்பிக்கலாம்.பணி நியமனம் செய்யப்படும் அங்கன்வாடி பணியாளருக்கு மாதம் 7,700, உதவியாளருக்கு 4,100 ரூபாய் 12 மாதங்கள் தொகுப்பூதியமாக வழங்கப்படும். அதன்பின், சிறப்பு காலமுறை ஊதியம் வழங்கப்படும்.விண்ணப்பத்தை www.icds.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றிதழ்களுடன் அந்தந்த வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில், வரும் 23ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ