உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தனித்துவ அடையாள எண் விவசாயிகளுக்கு அழைப்பு

தனித்துவ அடையாள எண் விவசாயிகளுக்கு அழைப்பு

திருவள்ளூர்: பிரதமரின் கவுரவ நிதி மற்றும் விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பெற, வரும் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நடப்பு 2025 - -26ம் ஆண்டு முதல், பிரதமர் கவுரவ நிதி மற்றும் பயிர் காப்பீடு திட்டம் உள்ளிட்ட மத்திய - மாநில அரசின் திட்டங்களில், விவசாயிகள் எளிதில் பயன்பெற, தனித்துவ அடையாள எண் மிகவும் அவசியம். திருவள்ளூர் மாவட்டத்தில், பிரதமரின் கவுரவ நிதி உதவி பெறும் விவசாயிகளில், 9,727 பேர் தனித்துவ அடையாள எண் பெறாமல் உள்ளனர். மேலும், அரசின் பல்வேறு வேளாண் சார்ந்த திட்ட பலன்களை பெறுவதற்கு, தங்களது நில உடைமை விபரம், பயிர் சாகுபடி அறிக்கை போன்ற ஆவணங்களை, விவசாயிகள் ஒவ்வொரு முறையும் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. இதில் ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்கும் வகையிலும், விவசாயிகள் குறித்த நேரத்தில் பயன்பெற ஏதுவாகவும், தமிழகத்தில் வேளாண் அடுக்ககம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு, தனித்துவ அடையாள எண் அவசியமாக உள்ளது. இந்த அடையாள எண் பெற, வரும் 15ம் தேதி கடைசி நாள். எனவே, இதுவரை தனித்துவ அடையாள எண் பெறாதோர், இ - சேவை மையத்தை அணுகி, எவ்வித கட்டணமுமின்றி பதிவு செய்து கொள்ளவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை