மேலும் செய்திகள்
கஞ்சா விற்ற பெண் கைது
11-Mar-2025
புழல்:புழல் மத்திய சிறை விசாரணை பிரிவில், கண்காணிப்பு கோபுரம் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த கைதி அஜித் என்பவரை, சிறை காவலர்கள் பிடித்து சோதனை மேற்கொண்டனர்.இதில், ஆசனவாயில் மறைத்து வைத்திருந்த 40 கிராம் கஞ்சா பொட்டலம் சிக்கியது. தொடர் விசாரணையில், கார்த்திக் என்ற கைதியை சந்திக்க வந்த உறவினர் முருகன், சாலையில் இருந்து சிறைக்குள் கஞ்சாவை பொட்டலமாக சுருட்டி வீசியது தெரியவந்தது.அதை, கூட்டாளிகளுடன் சேர்ந்து சிறை அறைக்குள் எடுத்து செல்ல முயன்றது தெரிய வந்தது. இது குறித்து சிறை அதிகாரிகள் அளித்த புகாரின்படி, சிறைக்குள் கஞ்சா வீசிய முருகன், 28, சிறையில் கஞ்சா பயன்படுத்த முயன்ற கைதிகளான வியாசர்பாடியைச் சேர்ந்த கார்த்திக், விஜய், அஜித் ஆகிய நான்கு பேர் மீது, புழல் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
11-Mar-2025