உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பாட்டு கேட்டிருந்தவரை தாக்கிய போதை ஆசாமிகள் மீது வழக்கு

பாட்டு கேட்டிருந்தவரை தாக்கிய போதை ஆசாமிகள் மீது வழக்கு

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம், பெரியகளக்காட்டூர் ஊராட்சி, சின்னகளக்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து, 55.; இவர், கடந்த 1ம் தேதி இரவு, வீட்டிற்கு வெளியே ஒலிப்பெருக்கியில் பாடல் கேட்டுக் கொண்டு அமர்ந்திருந்துள்ளார்.அப்போது, அவ்வழியே போதையில் வந்த நீதிவேல், 38, மற்றும் பாலு, 28, ஆகிய இருவரும், தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியுள்ளனர். தடுக்க முயன்ற மாரிமுத்துவின் மகன் மணிமுத்துவும் தாக்கப்பட்டார்.இதில், காயமடைந்த மாரிமுத்து, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். சம்பவம் குறித்து மாரிமுத்துவின் மகன் மணிமுத்து அளித்த புகாரின்படி, வழக்கு பதிந்த திருவாலங்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி