வாசகர்கள் கருத்துகள் ( 1 )
முதலில் இவ்வளவு வரதட்சிணை கொடுத்த பெண்ணின் பெற்றோரை கைது செய்யவேண்டும்
திருத்தணி:பள்ளிப்பட்டு ஒன்றியம் அத்திமாஞ்சேரிபேட்டையைச் சேர்ந்த குமாரி, 26, என்பவருக்கும், ஆந்திர மாநிலம் திருப்பதி பட்டாபிநகர் பகுதியைச் சேர்ந்த வினயகுமார், 32, என்பவருக்கும், 2023 பிப்., 2ம் தேதி திருமணம் நடந்தது.திருமணத்தின் போது குமாரியின் பெற்றோர், மகளுக்கு 40 சவரன் தங்க நகையும், வினயகுமாருக்கு, 6 சவரன் தங்க நகையும், 5 லட்சம் ரூபாய் ரொக்கம் போன்றவற்றை வரதட்சணையாக கொடுத்துள்ளனர்.இருப்பினும், வினயகுமார், அவரது தந்தை ரகு, தாய் சரஸ்வதி, சகோதரி அருணாகுமாரி ஆகியோர், மீண்டும் வரதட்சணையாக பணம், நகை கொண்டு வருமாறு குமாரியை துன்புறுத்தி வந்தனர். நேற்று, திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குமாரி புகார் அளித்தார்.இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார், வினயகுமார், ரகு, சரஸ்வதி, அருணாகுமாரி ஆகியோரிடம் விசாரித்து வருகின்றனர்.
முதலில் இவ்வளவு வரதட்சிணை கொடுத்த பெண்ணின் பெற்றோரை கைது செய்யவேண்டும்