உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கலெக்டரை பணி செய்யவிடாமல் தடுத்த தாய், மகன் மீது வழக்கு

கலெக்டரை பணி செய்யவிடாமல் தடுத்த தாய், மகன் மீது வழக்கு

பள்ளிப்பட்டு, பள்ளிப்பட்டு தாலுகாவில், கலெக்டர் பிரபுசங்கர், கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு வளர்ச்சி பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்டார். நேற்று முன்தினம் பள்ளிப்பட்டு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட போது, அந்த பகுதியைச் சேர்ந்த அமராவதி, 73, மற்றும் அவரது மகன் ஹேமாத்ரி, 43, ஆகியோர், கலெக்டரை வழிமறித்து பணி செய்ய விடாமல் தடுத்தனர்.பள்ளி மாணவர்கள் செல்லும் வழி குறித்து இவர்கள், கலெக்டரிடம் வாதிட்டு உள்ளனர். சம்பந்தப்பட்ட இடம், தங்களுக்கு உரியது எனவும், அதற்கான ஆவணங்கள் உள்ளது எனவும் கலெக்டர் பிரபுசங்கரிடம் தொடர்ந்து வாதம் செய்தனர். உரிய ஆவணங்களை, முறைப்படி வருவாய்த் துறையினரிடம் சமர்ப்பிக்க, கலெக்டர் அறிவுறுத்தியும் அவர்கள், தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து புதுப்பட்டு வி.ஏ.ஓ., தீபா, கலெக்டரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக, அமராவதி மற்றம் ஹேமாத்ரி ஆகியோர் மீது பள்ளிப்பட்டு போலீசில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ