/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / குடிநீர் சிராக வழங்காததை கண்டித்து மறியலில் ஈடுபட்டோர் மீது வழக்கு
குடிநீர் சிராக வழங்காததை கண்டித்து மறியலில் ஈடுபட்டோர் மீது வழக்கு
திருத்தணி:திருத்தணி ஒன்றியம் சிறுகுமி ஊராட்சி வி.சி.ஆர்.கண்டிகை கிராமத்தில், 500க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு, குடிநீர் சீராக வழங்காததை கண்டித்து, நேற்று முன்தினம் 50க்கும் மேற்பட்டோர் கே.ஜி.கண்டிகை -- நொச்சிலி மாநில நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த திருத்தணி போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.இந்நிலையில், அனுமதி பெறாமல் போக்குவரத்திற்கும், மக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட வி.சி.ஆர்.கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த 11 பெண்கள் மற்றும் 10 ஆண்கள் உள்ளிட்ட 21 பேர் மீது, திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.