உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கோட்டாட்சியருக்கு மிரட்டல் இருவர் மீது வழக்கு

கோட்டாட்சியருக்கு மிரட்டல் இருவர் மீது வழக்கு

திருவள்ளூர்:ஆக்கிரமிப்புகளை அகற்றச் சென்ற வருவாய் கோட்டாட்சியருக்கு கொலை மிரட்டல் விடுத்த இருவர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். திருவள்ளூர், பெரியகுப்பம் பகுதியில் சிலர் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து அதிலிருந்த மரங்களை வெட்டி சேதப்படுத்தி உள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், பெரிய குப்பம் கிராம நிர்வாக அலுவலர் ஜான்சன் மற்றும் வருவாய் துறையினர் 22ம் தேதி ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்றனர். அப்போது அங்கு இருந்த பெரியகுப்பம் சித்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த ராதாகிருஷ்ணன், சேஷய்யா ஆகிய இருவரும் வருவாய் கோட்டாட்சியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை பணி செய்ய விடாமல் தடுத்து தகராறு செய்துள்ளனர். இது குறித்து வி.ஏ.ஓ., ஜான்சன் கொடுத்த புகாரின்படி திருவள்ளூர் நகர போலீசார் ராதா கிருஷ்ணன், சேஷய்யா ஆகிய இருவர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !