உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஆடல், பாடல் நிகழ்ச்சி 5 பேர் மீது வழக்கு பதிவு

ஆடல், பாடல் நிகழ்ச்சி 5 பேர் மீது வழக்கு பதிவு

கும்மிடிப்பூண்டி:சட்டவிரோதமாக ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்திய ஐந்து பேர் மீது, போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் கிராமத்தில் உள்ள செல்லியம்மன் கோவில் திருவிழா, 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும். நேற்று முன்தினம், நாரசம்பாளையம் கிராமத்தில் திருவிழா நடந்த போது, சட்டவிரோதமாக கூட்டம் கூட்டி, ஆடல் பாடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தனர். இது தொடர்பாக, அந்த கிராமத்தைச் சேர்ந்த விழா குழுவினர் ஐந்து பேர் மீது, ஆரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை