துக்க வீட்டில் தம்பியை தாக்கிய அண்ணன் மீது வழக்கு பதிவு
மப்பேடு:மப்பேடு அடுத்த, குமாரசேரி பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன், 33. இவரது மகன்கள் வெங்கடேசன், 30, சூர்யா, 25. வீட்டின் அருகே நடந்த துக்க நிகழ்ச்சியில் வெங்கடேசன் மது அருந்து விட்டு நடனம் ஆடிக் கொண்டிருந்தார். இதை, இவரது தம்பி சூர்யா, ஏன் இப்படி எல்லாம் செய்கிறாய் என கேட்டுள்ளார்.இதனால் இருவருக்குமிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த வெங்கடேசன், சூர்யாவை கட்டையால் தாக்கியுள்ளார்.படுகாயம்டைந்த சூர்யா, திருவள்ளூர் அரசு மருத்துவக்க்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இதுகுறித்து சீனிவாசன், நேற்று முன்தினம் அளித்த புகாரையடுத்து, மப்பேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.