உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கால்நடை குடிநீர் தொட்டி வடகுப்பத்தில் படுமோசம்

கால்நடை குடிநீர் தொட்டி வடகுப்பத்தில் படுமோசம்

பள்ளிப்பட்டு, பராமரிப்பு இல்லாத கால்நடை குடிநீர் தொட்டியில் தேங்கியுள்ள குப்பையால், விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.பள்ளிப்பட்டு ஒன்றியம், வடகுப்பம் கிராமத்தின் வடகிழக்கு பகுதியில் உள்ள குளக்கரையில், 100 நாள் வேலை திட்டத்தின் கீழ், கால்நடை குடிநீர் தொட்டி கட்டப்பட்டுள்ளது. மேய்ச்சலில் இருந்து திரும்பும் கால்நடைகளின் தண்ணீர் தேவையை, இந்த குடிநீர் தொட்டி பூர்த்தி செய்து வந்தது.சில மாதங்களாக இந்த கால்நடை குடிநீர் தொட்டியின் பராமரிப்பு கைவிடப்பட்டுள்ளது. இதனால், இந்த தொட்டியில் குப்பை நிறைந்துள்ளது. எனவே, கால்நடை குடிநீர் தொட்டியை சுத்தம் செய்து, சுத்தமான தண்ணீரை நிரப்பி வைக்க வேண்டும் என, கால்நடை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை