உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அரசு பள்ளி வளாகத்தில் ஓய்வெடுக்கும் கால்நடைகள்

அரசு பள்ளி வளாகத்தில் ஓய்வெடுக்கும் கால்நடைகள்

பொன்னேரி: அரசு மகளிர் பள்ளி நுழைவாயில் பகுதி, கதவு இல்லாமல் இருப்பதால், மேய்ச்சல் தேடி வரும் கால்நடைகள் பள்ளி வளாகத்தில் ஓய்வெடுக்கின்றன. பொன்னேரி வேண்பாக்கம் பகுதியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், 1,600க்கும் அதிகமான மாணவியர் படிக்கின்றனர். இப்பள்ளிக்கு இரண்டு இடங்களில் நுழைவாயில்கள் உள்ளன. இதில் மாவட்ட கல்வி அலுவலகம் வளாகம் அருகே உள்ள நுழைவாயிலுக்கு கதவு இல்லாமல் திறந்த நிலையில் உள்ளது. இதன் வழியாக, கால்நடைகள் பள்ளி வளாகத்திற்கு நுழைந்து மேய்ச்சல் தேடுகின்றன. பின், அதே வளாகத்தில் ஆங்காங்கே படுத்து உறங்குகின்றன. பள்ளி வகுப்பறை கட்டடங்கள் அருகே கால்நடைகள் சுற்றித்திரியும் போது மாணவியர் அச்சத்திற்கு ஆளாகின்றனர். கால்நடைகள் விட்டுச்செல்லும் கழிவுகளும் பள்ளி வளாகத்தில் ஆங்காங்கே இருப்பதால், துர்நாற்றம் வீசுகிறது. எனவே, பள்ளி வளாகத்தின் நுழைவு வாயில் பகுதியில் இரும்பு கதவு அமைத்து, கால்நடைகள் உள்ளே புகுவதை தடுத்து மாணவியரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ