உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சாலையில் கால்நடைகள் உலா வாகன ஓட்டிகள் திக்... திக்

சாலையில் கால்நடைகள் உலா வாகன ஓட்டிகள் திக்... திக்

திருவாலங்காடு, திருவாலங்காடு சுற்றுவட்டார பகுதிகளான வியாசபுரம், வீரராகவபுரம், புண்டரீகபுரம் உள்ளிட்ட பகுதிகளில், 20க்கும் மேற்பட்ட கிராமத்தினர் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், சில உரிமையாளர்கள் தங்களது கால்நடைகளை முறையாக பராமரிக்காததால், அரக்கோணம் -- திருவள்ளூர் மாநில நெடுஞ்சாலையில் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகின்றன.இச்சாலையில், தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வரும் நிலையில், சாலை நடுவே வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக கால்நடைகள் உலா வருவதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.சில நேரங்களில் கால்நடைகள் மீது வாகனம் மோதி விபத்து ஏற்பட்டு வருகிறது. இதனால், இச்சாலையில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடனேயே சென்று வருகின்றனர்.சாலைகளில் பராமரிப்பின்றி சுற்றித்திரியும் மாடுகளை பறிமுதல் செய்து, அதன் உரிமையாளருக்கு அபராதம் விதிக்க வேண்டும் என, கலெக்டர் பலமுறை அறிவித்துள்ள நிலையில், இதுதொடர்பாக அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக சாலையில் உலா வரும் கால்நடைகளை கட்டுப்படுத்தி, அதன் உரிமையாளர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி