உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மீஞ்சூரில் சிசிடிவி அமைத்து குற்றத்தை தடுக்க எதிர்பார்ப்பு

மீஞ்சூரில் சிசிடிவி அமைத்து குற்றத்தை தடுக்க எதிர்பார்ப்பு

மீஞ்சூர்;மீஞ்சூர் பஜார் பகுதிகளில், வியாபாரிகள் மற்றும் மக்களின் பாதுகாப்பு கருதி, 'சிசிடிவி' கேமரா பொருத்தி, குற்றத்தை தடுக்க வேண்டும் என, வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர். பொன்னேரி - திருவொற்றியூர் மாநில நெடுஞ்சாலையில், மீஞ்சூர் பஜார் பகுதி அமைந்துள்ளது. இங்கு, 1,000க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. மீஞ்சூரை சுற்றியுள்ள, 100க்கும் மேற்பட்ட கிராமங்களின் முக்கிய வியாபார மையமாக விளங்குகிறது. காலை - மாலை நேரங்களில், மீஞ்சூர் பஜார் பகுதியில் மக்கள் அதிகளவில் கூடுகின்றனர். இதனால், மக்களின் பாதுகாப்பு கருதி, பஜார் பகுதி முழுதும் 'சிசிடிவி' கேமரா பொருத்த வேண்டும் என, வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது: மாலை நேரங்களில் மக்கள் அதிகளவில் கடைகளுக்கு வந்து செல்கின்றனர். அவ்வப்போது, சிறு சிறு வழிப்பறி, பெண்களிடம் 'ஈவ் டீசிங்' உள்ளிட்ட சம்பவங்கள் நடக்கின்றன. இந்த குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை உடனடியாக கண்டறிவதில் சிக்கல் ஏற்படுகிறது. பஜார் பகுதி முழுதும், ஆங்காங்கே 'சிசிடிவி' கேமரா பொருத்தி, அவற்றை காவல் நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் இணைத்து கண்காணிக்க வேண்டும். இது, வியாபாரிகளுக்கும், மக்களுக்கும் பாதுகாப்பாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை