சென்னை வேலம்மாள் பள்ளி தேசிய பேட்மின்டனில் சாம்பியன்
சென்னை, ஹரியானா மாநிலத்தில் நடந்த தேசிய பேட்மின்டன் போட்டியில், சென்னை வேலம்மாள் வித்யாலயா ஆலப்பாக்கம் பள்ளி அணி தங்கம் வென்று அசத்தியுள்ளது. சத்யானந்த் பள்ளி மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளி நிறுவனம் சார்பில், தேசிய அளவில், சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு இடையிலான பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியை, ஹரியானா மாநிலத்தின் கோஹானா நகரில் நடத்துகின்றன. இதில் போட்டியிட்ட சென்னை ஆலப்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா பள்ளி அணி, தங்கம் வென்று அசத்தியுள்ளது. இந்த அணியில், தீக் ஷிதா சிங், மோஹிதா, மகாலட்சுமி, கனிஷ்கா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இதன் இறுதிப் போட்டியில், சென்னை வேலம்மாள் வித்யாலயா அணி , துபாயின் இந்தியன் அல்குவா பள்ளியை எதிர்த்து மோதியது. விறுவிறுப்பான ஆட்டத்தில், வேலம்மாள் வித்யாலயா அணி 31 - 24, 31 - 15, 31 - 30 என்ற செட் கணக்கில் வென்று, தங்கப்பதக்கம் பெற்றது.