மேலும் செய்திகள்
போதை மாத்திரை கடத்திய சென்னை வாலிபர் கைது
28-Sep-2025
திருத்தணி;மும்பையில் இருந்து சென்னைக்கு போதை மாத்திரைகள் கடத்த முயன்ற, சென்னையைச் சேர்ந்த ஆறு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். மும்பையில் இருந்து ரேணிகுண்டா, திருத்தணி வழியாக, சென்னை சென்ட்ரல் செல்லும் விரைவு ரயில்களில், கடந்த சில மாதங்களாக போதை மாத்திரைகள் சென்னைக்கு கடத்தி செல்கின்றனர். நேற்று திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி.,யின் தனிப்படை போலீசார், திருத்தணி ரயில் நிலையத்தில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மும்பையில் இருந்து சென்னை செல்லும் விரைவு ரயிலில் இருந்து, திருத்தணி ரயில் நிலையத்தில் ஆறு வாலிபர்கள் ஒன்றாக இறங்கினர். சந்தேகத்தின்படி, ஆறு பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால், அவர்களின் உடைமைகளை சோதனை செய்தனர். அதில், 1,200 போதை மாத்திரைகள் இருந்தது தெரியவந்தன. அவற்றை சென்னைக்கு கடத்தி செல்ல இருந்ததும் தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், சென்னை பெரும்பாக்கத்தைச் சேர்ந்த தானியல், 23, மனோஜ், 22, பாஷா, 23, பிரவீன், 21, முகமது ஹருன் ரசீத், 26, மற்றும் தில்னா, 28, ஆகியோரை கைது செய்தனர்.
28-Sep-2025