நாளை முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி துவக்கம்
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி, நாளை துவங்கி, செப்., 12ம் தேதி வரை நடைபெற உள்ளது. திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: திருவள்ளூர் மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி, நாளை துவங்கி, செப்., 12ம் தேதி வரை நடைபெற உள்ளது. போட்டிகள், மாவட்ட விளையாட்டு அரங்கம், ஆவடி சிறப்பு காவல்படை மைதானம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற உள்ளன. இதில், தடகளம், செஸ், நீச்சல் உள்ளிட்ட பல்வேறு வகையான போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.