மீனவர்களின் வாரிதாரர் 20 பேருக்கு குடிமை பணி போட்டி தேர்வு பயிற்சி
திருவள்ளூர்:மீனவர்களின் பட்டதாரி வாரிசுதாரர் 20 பேருக்கு குடிமை பணி போட்டி தேர்வு பயிற்சிக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:மீன்வள துறை மற்றும் சென்னை அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம் இணைந்து. ஆண்டுக்கு 20 மீனவர் குடும்ப பட்டதாரிகளுக்கு பிரத்யேக பயிற்சி அளிக்கப்படுகிறது.நடப்பாண்டில், இப்பயிற்சியில் சேர விரும்பும் கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் வாரிசுதாரர்கள், இப்பயிற்சி திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். இதற்கான விண்ணப்ப படிவம் மற்றும் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை www.fisheries.tn.gov.inஎன்ற இணையதளத்தில் கட்டணம் இன்றி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். சென்னை மீன்வள துறை இணை இயக்குனர் அலுவலகம் அல்லது பொன்னேரியில் உள்ள உதவி இயக்குனர் அலுவலகத்தில் இலவசமாக பெற்று கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, பொன்னேரி மீன்வள உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு, வரும் 5ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.மேலும் விபரங்களுக்கு 044 - -2797 2457 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.