மேலும் செய்திகள்
அரசு பள்ளியில் ஆண்டுவிழா கொண்டாட்டம்
28-Mar-2025
ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 10ம் வகுப்பு பொது தேர்வு நடந்து வருகின்றது. இதில், சுற்றுப்புற பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் தேர்வு எழுதி வருகின்றனர். நேற்று, ஆங்கிலம் பாட தேர்வு நடந்தது. தேர்வு முடிந்து வெளியே வந்த மாணவர்களில் சிலர், திடீரென ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இதை கண்டு அதிர்ச்சியடைந்த மற்ற மாணவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.உடனே, ஆசிரியர்களும், போலீசாரும் மோதலில் ஈடுபட்ட மாணவர்களை அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர். தேர்வு முடிந்ததும் வெளியேறும் மாணவர்கள், பேருந்து நிலையம் வரை போலீசார் கண்காணிக்க வேண்டும்.குறிப்பாக, மாணவியரின் பாதுகாப்பிற்காக பெண் போலீசாரை பணியில் அமர்த்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
28-Mar-2025