மேலும் செய்திகள்
அரசு அலுவலகங்களில் கழிவு பொருள் சேகரிப்பு
20-Sep-2025
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் 'துாய்மை இயக்கம் - 2.0' மூலம் அரசு அலுவலகங்கள் மற்றும் சுற்றுப்புறத்தை துாய்மையாக வைத்திருக்க, குப்பை கழிவுகளை அகற்றும் பணி துவங்கியது. திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி ஒன்றியம் மேல்மணம்பேடு ஊராட்சியில் நேற்று, ஊரக வளர்ச்சி முகமை சார்பில், 'தூய்மை இயக்கம் 2.0' மூலம் அரசு அலுவலகங்கள் மற்றும் சுற்றுப்புறத்தை துாய்மையாக வைத்திருக்க கழிவு பொருட்களை அகற்றும் பணி துவங்கியது. திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் நாசர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, துாய்மை பணியை துவக்கி வைத்தார். தொடர்ந்து, அங்கன்வாடி மையங்கள் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள குப்பை கழிவுகளை அகற்றி, அங்குள்ள சமையலறை தோட்டத்தை பார்வையிட்டார். பின், வீடு, வீடாக சென்று குப்பைகளை சேகரிக்கும் பணிகளை, துாய்மை பணியாளர்களுடன் மேற்கொண்டார். பின், துாய்மை திருவள்ளூர் செயலியை அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து, மேல்மணம்பேடு ஊராட்சியில் பணிபுரியும் எட்டு துாய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு கவச உபகரணங்களை வழங்கினார்.
20-Sep-2025