உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கூட்டுறவு பட்டாசு கடைகளில் நாளை விற்பனை துவக்கம்

கூட்டுறவு பட்டாசு கடைகளில் நாளை விற்பனை துவக்கம்

சென்னை : கூட்டுறவு துறை சார்பில், தீபாவளியை முன்னிட்டு, தற்காலிக பட்டாசு கடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் நாளை, பட்டாசு விற்பனை துவங்குகிறது. தீபாவளி பண்டிகை, வரும் 31ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அதையொட்டி, கூட்டுறவு பண்டக சாலைகள், தற்காலிகமாக பட்டாசு கடைகள் அமைத்துள்ளன.இவற்றில், வெளிச்சந்தையைவிட சற்று குறைந்த விலையில், முன்னணி நிறுவனங்களின் பட்டாசுகள் விற்கப்படுகின்றன.இதற்காக, சென்னையில் டி.யு.சி.எஸ்., எனப்படும், திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கம் சார்பில், தேனாம்பேட்டை காமதேனு வளாகம், அடையாறு பெசன்ட் நகர், வேளச்சேரி, சாலிகிராமம், ஆர்.ஏ.புரம், திருவல்லிக்கேணி, பெரியார் நகர், வில்லிவாக்கம் ஆகிய ஒன்பது இடங்களில், பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை சார்பில், பல்லாவரம், குரோம்பேட்டை, கிழக்கு தாம்பரம், செம்பாக்கம், மேற்கு தாம்பரம் சண்முகம் ரோடு, ஆலந்துார், போரூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் பட்டாசு கடைகள்துவக்கப்பட்டு உள்ளன. இவற்றில், நாளை முதல் பட்டாசு விற்பனை துவங்குகிறது. பட்டாசு விற்பனையில் முறைகேட்டை தடுக்க, ஒவ்வொரு கடையில் நடக்கும் விற்பனையும் கணினியில் பதிவு செய்யப்பட வேண்டும்.அதை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ