இடிந்து விழுந்த பள்ளி சுற்றுச்சுவர்
திருவள்ளூர்: திருவள்ளூர் நகராட்சி தொடக்கப் பள்ளியின் சுற்றுச்சுவர், இடிந்து விழுந்தது. திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட, பெரிய எடப்பாளையத்தில் நகராட்சி தொடக்கப் பள்ளி உள்ளது. அங்கு, 1 முதல் 5ம் வகுப்பு வரை, 50க்கும் மேற்பட்ட மாணவ -- மாணவியர் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு, பள்ளியின் முகப்பில் உள்ள, சுற்றுச்சுவர் துாண், இரும்பு கேட்டுடன் இடிந்து கீழே விழுந்தது. மேலும், இடிந்து கிடந்த கேட்டை நகராட்சி ஊழியர்கள் நேற்று அகற்றினர். நள்ளிரவில் நடந்த சம்பவம் என்பதால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.