மாணவர்கள் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க கலெக்டர் அறிவுரை
திருவள்ளூர்:அரசு பொதுத்தேர்வில் மாணவ - மாணவியர் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க கலெக்டர் ஆலோசனை நடத்தினார்.திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, பத்தாம் மற்றும் பிளஸ் 2 வகுப்பு பள்ளி மாணவ - மாணவியரின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பது தொடர்பாக தலைமை ஆசிரியர்களுடன் கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில், கலெக்டர் பிரதாப் தலைமை வகித்து, பள்ளி, மாணவ - மாணவியரின் தேர்ச்சி வீகிதம் குறைபாடு, குறைபாடுகளை களைந்து தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.பின், தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தி, வரும் பொதுத்தேர்வில் அதிகளவில் தேர்ச்சி விகிதம் அடைய வேண்டும் என, தலைமையாசிரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.நிகழ்ச்சியில், பொன்னேரி தொடக்க கல்வி அலுவலர் ரவி, மாவட்ட கல்வி அலுவலர் ரேச்சல் பிரபாவதி உட்பட பலர் பங்கேற்றனர்.