உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / காலநிலை மாற்ற விழிப்புணர்வு மாணவர்களுக்கு கலெக்டர் பரிசு

காலநிலை மாற்ற விழிப்புணர்வு மாணவர்களுக்கு கலெக்டர் பரிசு

திருவள்ளூர்:அரசு நடுநிலை பள்ளிகளில் காலநிலை மாற்றத்திற்கான விழிப்புணர்வு போட்டியில், வெற்றி பெற்றவர்களுக்கு திருவள்ளூர் கலெக்டர் பரிசு வழங்கினார்.திருவள்ளூர், பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசு நடுநிலை பள்ளிகளில், காலநிலை மாற்றத்திற்கான விழிப்புணர்வு குறித்து, பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன இதில், ஓவியம் - லோகிதா 8ம் வகுப்பு, அரண்வாயல்குப்பம், மோகனபிரியா - 7ம் வகுப்பு, அரண்வாயல், சாதனா - 8ம் வகுப்பு, கீழானுார் ஆகியோர் முதல் 3 இடம் பிடித்தனர்.கதை எழுதுதல் போட்டியில், யாழினி - 7ம் வகுப்பு, கீழானுார், சிந்துஜா - 8ம் வகுப்பு, அரண்வாயல்குப்பம்; கட்டுரை போட்டி நிஷா - 8ம் வகுப்பு, புல்லரம்பாக்கம், ஜெகதீஸ்வரி - 6ம் வகுப்பு, அரண்வாயல்குப்பம்; உறுதிமொழி எழுதுதல் போட்டியில் தமிழச்சி - 8ம் வகுப்பு, கீழானுார், ஆண்ட்ரியா - 6ம் வகுப்பு, அரண்வாயல், லக்க்ஷிதா - 7ம் வகுப்பு, நெல்வாய்; உபயோகமற்ற பொருட்கள் பயன்படுத்தி பயனுள்ள வகையில் மாற்றும் போட்டியில் ஹேடன்ஜேஜாக் - 6ம் வகுப்பு, அரண்வாயல், தெரசாஜாய் - 8ம் வகுப்பு, கீழானுார், ஆகியோர் வெற்றி பெற்றனர்.வெற்றி பெற்ற மாணவ - மாணவியருக்கு திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர், நேற்று சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில், பசுமை தோழர் சுருதி மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி