உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / காமென்வெல்த் யோகா போட்டி கும்மிடி மாணவர்கள் அசத்தல்

காமென்வெல்த் யோகா போட்டி கும்மிடி மாணவர்கள் அசத்தல்

கும்மிடிப்பூண்டி,இந்தோனேஷியா நாட்டில் உள்ள பாலி தீவில், கடந்த 24 மற்றும் 25ம் தேதிகளில் காமென்வெல்த் யோகாசன போட்டிகள் நடந்தன. காமன்வெல்த் யோகாசன விளையாட்டு சம்மேளனம் சார்பில் நடத்தப்பட்ட போட்டியில், இந்தியா, மலேஷியா, சிங்கப்பூர் உட்பட, 12 நாடுகளில் இருந்து 250 பேர் பங்கேற்றனர்.இந்திய அணி சார்பில், 32 போட்டியாளர்கள் பங்கேற்றனர். அவர்களில், 11 பேர் கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும் ஸ்ரீ சங்கரி யோகா மைய மாணவர்கள். வயது வாரியாக பல்வேறு பிரிவுகளில் நடந்த போட்டியில், கும்மிடிப்பூண்டி மாணவர்கள் 11 பேரும், அவரவர் பிரிவில் தங்கம் வென்றனர்.நேற்று நாடு திரும்பிய 11 பேருக்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின், பஜார் வீதி வழியாக ஊர்வலமாக அழைத்து சென்று கவுரவிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி