புகார் பெட்டி
லட்சுமிபுரத்தில் மின்கம்பம் சேதம்புதிதாக அமைக்க எதிர்பார்ப்புபொன்னேரி - பெரும்பேடு சாலையில், லட்சுமிபுரம் கிராமம் அருகே மின்மாற்றி உள்ளது. இதன் அருகில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து உள்ளது. கம்பத்தின் சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து உருக்குலைந்து இருப்பதால், பலத்த காற்று வீசினால் உடைந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இந்த கம்பத்தில் இருந்து மின்மாற்றிக்கு உயரழுத்த மின்சாரம் செல்வதால், அசம்பாவிதங்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே, சேதமடைந்துள்ள மின்கம்பத்தை அகற்றிவிட்டு, புதிதாக அமைக்க மின்வாரிய துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ஜி.கிருஷ்ணா, பொன்னேரி.கம்பத்தில் படர்ந்த கொடிகள்மின் தடையால் கடும் அவதிதிருவாலங்காடு ஒன்றியம் தாழவேடு சமத்துவபுரம் அருகே மின்கம்பம் அமைத்து, சமத்துவபுரம் குடியிருப்பு மற்றும் தாழவேடு காலனி பகுதிக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளன.இந்நிலையில், சமத்துவபுரம் அருகே உள்ள மின்கம்பம் இருக்கும் இடம் முழுதும் செடிகள் வளர்ந்தும், மின்கம்பம் முழுதும் கொடிகள் வளர்ந்துள்ளன. இதனால், மின்தடை அடிக்கடி ஏற்படுகிறது. மேலும், அப்பகுதி மக்கள் மற்றும் கால்நடைகள் செல்வதற்கு அச்சப்படுகின்றனர். எனவே, மின்கம்பத்தை சுற்றிலும் வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்றி, சீரான மின்சாரம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எஸ்.குமார், தாழவேடு.தோக்கமூர் சாலை அரிப்புவாகன ஓட்டிகள் அச்சம்கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் அருகே, எல்.ஆர்.மேடு கிராமத்தில் இருந்து தோக்கமூர் கிராமம் செல்லும் சாலை, ஒன்றிய பராமரிப்பில் உள்ளது.தோக்கமூர் கிராம நிர்வாக அலுவலகம் அருகே, சாலையோரம் அரிப்பு ஏற்பட்டு ஆபத்தாக உள்ளது. இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் செல்வோர் தடுமாறும் நிலை ஏற்படுகிறது. பலர் கீழே விழுந்து காயம் அடைகின்றனர்.எனவே, கும்மிடிப்பூண்டி ஒன்றிய நிர்வாகம், சாலையோரம் ஏற்பட்ட ஏற்பட்ட அரிப்பை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ஆர்.கமலநாதன், கும்மிடிப்பூண்டி.தலைகுனிந்த 'சிசிடிவி'சீரமைக்க கோரிக்கைபுழல், கதிர்வேடு சந்திப்பு 24 மணி நேரமும் போக்குவரத்து மிகுந்த சாலையாக உள்ளது. இதனருகே புழல் சிறைச்சாலை, மாதவரம் பேருந்து நிலையம், கன்டெய்னர் யார்டுகள் உள்ளதால், கனரக வாகன போக்குவரத்துடன் பொதுமக்கள் அதிகம் பயணிக்கும் சாலையாக உள்ளது. விபத்து எச்சரிக்கை சந்திப்பான இப்பகுதியில், சாலை நடுவே உள்ள 'சிசிடிவி' கேமராவில், இரண்டு கேமராக்கள் பழுதாகி கீழே சரிந்துள்ளன. போக்குவரத்து கண்காணிப்பில் போலீசாருக்கு 'மூன்றாவது கண்'ணாக உதவும் கேமராக்கள் சரிந்துள்ளதால், விதிமீறலில் ஈடுபடுவோர் தப்பிக்கும் நிலைமை உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, கேமராக்களை சீரமைக்க முன்வர வேண்டும்.- குமரேசன், வியாபாரி, கதிர்வேடு.விஷ ஜந்துக்களின் கூடாரமானஆவடி 'புதர்மண்டிய' பூங்காஆவடி மாநகராட்சி, வசந்தம் நகர் 43வது வார்டில், சந்திரா சிட்டி பகுதி உள்ளது. இங்குள்ள குடியிருப்பில் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட சிறுவர் விளையாட்டு பூங்கா உள்ளது.இந்த பூங்கா, பல மாதங்களாக புதர்மண்டி, விஷ ஜந்துக்களின் கூடாரமாக மாறி உள்ளது. இதனால், பகுதிவாசிகள் பயன்படுத்த முடியாமல் வீணாகி வருகிறது. மாநகராட்சி அதிகாரிகள், பூங்காவை சீரமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.- ரஞ்சித், வசந்தம் நகர், ஆவடி.