மேலும் செய்திகள்
நாள் முழுதும் மின்வெட்டு மின்வாரியம் முற்றுகை
24-Apr-2025
Match ஒன்று Qualifiers மூன்று DCvsGT
19-May-2025
பொன்னேரி:மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட போலாச்சியம்மன்குளம், அவுரிவாக்கம், கம்மாளமடம் உள்ளிட்ட கிராமங்களுக்கு, கூட்டு குடிநீர் திட்டத்தின் வாயிலாக, மெதுார் ஏரி அருகே ஆழ்துளை கிணறுகள் அமைத்து, குடிநீர் விநியோகம் நடைபெறுகிறது.சீரான குடிநீர் விநியோகம் இல்லை எனவும், தனியார் பள்ளி ஒன்று கூட்டு குடிநீர் திட்ட குழாயில் இருந்து, அனுமதியின்றி தண்ணீர் எடுப்பதற்கான பணிகளில் ஈடுபட்டு உள்ளதாகவும் குற்றச்சாட்டும் கிராமவாசிகள், மீஞ்சூர் ஒன்றிய அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.புகார் மீது நடவடிக்கை இல்லாத நிலையில், நேற்று கிராமவாசிகள், பழவேற்காடில் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு, போலாச்சியம்மன்குளம் வழியாக திரும்பிய கலெக்டரிடம் முறையிட்டனர்.குடிநீர் தட்டுப்பாடு குறித்து மீஞ்சூர் ஒன்றிய நிர்வாகத்திடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை எனவும், தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் கூறியதை அடுத்து, கிராமவாசிகள் கலைந்து சென்றனர்.
24-Apr-2025
19-May-2025