உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருத்தணியில் ரூ.13.27 கோடியில் கான்கிரீட் சாலை பணி துவக்கம்

திருத்தணியில் ரூ.13.27 கோடியில் கான்கிரீட் சாலை பணி துவக்கம்

திருத்தணி:திருத்தணியில் சேதமடைந்த கான்கிரீட் சாலைகள், 13.27 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்கும் பணி துவங்கியுள்ளது. திருத்தணி நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில், திருப்பாற்கடல் கூட்டுக்குடிநீர் திட்ட பணிகளால், சாலைகள் முழுதும் சேதமடைந்துள்ளன. அதாவது, 350க்கும் மேற்பட்ட கான்கிரீட் மற்றும் தார்ச்சாலைகள் சேதமடைந்ததால், வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வந்தனர். முதற்கட்டமாக, சேதமடைந்த கான்கிரீட் சாலைகளை சீரமைப்பதற்கும், மழைநீர் வடிகால்வாய் அமைப்பதற்கும் நகர்ப்புற மேம்பாடு திட்டத்தின் கீழ், 13.27 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. நேற்று, திருத்தணி நகராட்சியின் இரண்டாவது வார்டு ஏரிக்கரை தெருவில், கான்கிரீட் சாலை அமைக்கும் பணியை நகர்மன்ற தலைவர் சரஸ்வதிபூபதி, ஆணையர் பாலசுப்பிரமணியம், துணை தலைவர் சாமிராஜ் ஆகியோர் துவக்கி வைத்தனர். 'திருத்தணி நகராட்சியில், 186 கான்கிரீட் சாலைகள் மூன்று மாதத்தில் சீரமைக்கப்படும்' என, நகர்மன்ற தலைவர் சரஸ்வதிபூபதி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை