குட்கா பறிமுதல்
திருவள்ளூர்:திருவள்ளூர் ஜெயாநகர் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப்பாக்குகள் விற்பனை செய்யப்படுவதாக திருவள்ளூர் தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து காவல் உதவி ஆய்வாளர் மோகன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை அப்பகுதியில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினர்.அப்போது தசரதன், 52 என்பவரது கடையில் சோதனை செய்தபோது 63 ஹான்ஸ், 2 கூல் லிப் என, 65 பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். திருவள்ளூர் தாலுகா போலீசார் தசரதனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.