உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கிரேன் மோதி தம்பதி படுகாயம்; ரூ.49 லட்சம் இழப்பீடு தர உத்தரவு

கிரேன் மோதி தம்பதி படுகாயம்; ரூ.49 லட்சம் இழப்பீடு தர உத்தரவு

சென்னை : அண்ணாசாலையில், 'கிரேன்' மோதி பாதிக்கப்பட்ட தம்பதிக்கு, 49 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் உத்தரவிட்டு உள்ளது.சென்னை அடையாறை சேர்ந்தவர் லலித்குமார், 34. இவரது மனைவி சுனிதா, 29. இருவரும் தொழிலதிபர்கள். கடந்த 2021 நவ., 23ம் தேதி, 'பைக்'கில் சென்னை அண்ணாசாலையில் சென்றனர். அண்ணாசாலை சிக்னலில் நின்ற போது, திடீரென இவர்களது பைக் மீது, 'கிரேன்' ஒன்று மோதியது. இதில், லலித்குமாரின் இடது கால்; சுனிதாவின் இடுப்பு, முதுகு, கால் ஆகிய பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. விபத்தில் ஏற்பட்ட படுகாயத்திற்கு லலித்குமார், 5 கோடி ரூபாயும்; சுனிதா 20 லட்சம் ரூபாயும் இழப்பீடு கோரி, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கு, சிறு வழக்குகளுக்கான முதன்மை நீதிமன்ற நீதிபதி டி.லிங்கேஸ்வரன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவு:விபத்தில் லலித்குமாரின் இடது கால் நீக்கப்பட்டுள்ளது. அவருக்கு, 30 சதவீதம் அளவுக்கு உடல் செயல்பாட்டு இயலாமை ஏற்பட்டுள்ளது. அவரின் மனைவி சுனிதாவுக்கு, இடுப்பு பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. சிகிச்சைக்குப் பின் பணிக்கு திரும்பியுள்ளார். அவருக்கு 5 சதவீத அளவுக்கு உடல் செயல்பாட்டு இயலாமை ஏற்பட்டுள்ளது.அதிவேகம், அஜாக்கிரதையாக டிரைவர் கிரேனை இயக்கியதே விபத்திற்கு காரணம். எனவே, லலித்குமாருக்கு, 42.74 லட்சம் ரூபாயும்; சுனிதாவுக்கு, 6.26 லட்சம் ரூபாய் இழப்பீடை, 90 நாட்களுக்குள் சோழா எம்.எஸ்.ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி வழங்க வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி