உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மீஞ்சூரில் அறுந்து கிடந்த மின்ஒயரில் சிக்கி மாடு பலி

மீஞ்சூரில் அறுந்து கிடந்த மின்ஒயரில் சிக்கி மாடு பலி

மீஞ்சூர்:மீஞ்சூர் ஜவகர் நகரைச் சேர்ந்தவர் பாலாஜி, 30. இவர், பசு மாடுகளை வைத்து, பால் வியாபாரம் செய்து வருகிறார். நேற்று காலை, இவரது ஆறு பசு மாடுகள், மீஞ்சூர் புதிய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள ஏரிக்கரை பகுதியில் மேய்ச்சலுக்கு சென்றன.அப்போது, திடீரென குடியிருப்பு பகுதியில் இருந்த மின்ஒயர் அறுந்து கீழே விழுந்தது. இதில், பாலாஜியின் பசு மாடு ஒன்று அறுந்து கிடந்த மின்ஒயரில் சிக்கி, மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.தகவல் அறிந்து வந்த மின் வாரியத்தினர், மின் இணைப்புகளை துண்டித்து சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர். இது தொடர்பாக, மீஞ்சூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை