உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பாலேஸ்வரம் அணைகட்டு மதகு சேதம்

பாலேஸ்வரம் அணைகட்டு மதகு சேதம்

ஊத்துக்கோட்டை:நகரியில், மலைக்குன்றுகளுக்கு இடையே உருவாகும் ஆரணி ஆறு, ஆந்திர மாநிலத்தில், 65.20 கி.மீட்டர் துாரம் பயணித்து, பிச்சாட்டூர், சுருட்டப்பள்ளி வழியே, தமிழக எல்லையான ஊத்துக்கோட்டையை அடைக்கிறது.அங்கிருந்து, சிட்ரபாக்கம், பனப்பாக்கம், கல்பட்டு, செங்காத்தாக்குளம், பாலேஸ்வரம், ஏ.என்.குப்பம், லட்சுமிபுரம் ஆகிய பகுதிகள் வழியே, 66.40 கி.மீட்டர் துாரம் பயணித்து, பழவேற்காடு அருகே, புலிக்காட் எனும் இடத்தில், வங்கக் கடலில் கலக்கிறது.பெரியபாளையம் அருகே, பாலேஸ்வரம் அணைக்கட்டு, 2009ல் கட்டப்பட்டது. 7.44 கோடி ரூபாயில், கட்டப்பட்ட இந்த அணைக்கட்டில், நான்கு மதகுகள் உள்ளன. இதில், தேக்கி வைக்கப்படும் நீரால், சுற்றியுள்ள, 5,000 ஏக்கர் விவசாய நிலம் பயனடையும்.சமீபத்தில் பெய்த மழையால் இந்த அணைக்கட்டு முழுதும் தண்ணீர் நிறைந்து உள்ளது. இங்குள்ள நான்கு மதகுகளில், ஒரு மதகு பழுதடைந்து அதன் வழியே தண்ணீர் வெளியேறி வருகிறது. நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து தண்ணீர் வெளியேறுவதை தடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை