உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கால்நடை குடிநீர் தொட்டி சேதம்

கால்நடை குடிநீர் தொட்டி சேதம்

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியத்திற்கு உட்பட்டது பாப்பரம்பாக்கம் ஊராட்சி. இங்கிருந்து, வெள்ளேரிதாங்கல் செல்லும் சாலையோரம், அரசு பள்ளி அருகே, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் 2020 - 21ம் ஆண்டு, நிதி ஒதுக்கீட்டின்கீழ், தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில், கால்நடைகளுக்கான குடிநீர் தொட்டி கட்டப்பட்டது.இந்த கால்நடை குடிநீர் தொட்டி கட்டப்பட்டு நான்கு ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது, சேதமடைந்து குடிநீர் வீணாகி வருகிறது.மேலும், குழாய் வால்வு பகுதி பழுதடைந்தும் குடிநீர் வீணாகி வருகிறது.எனவே, சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அதிகாரி பாப்பரம்பாக்கம் ஊராட்சியில் ஆய்வு செய்து, சேதமடைந்த கால்நடை குடிநீர் தொட்டியை சீரமைத்து, தண்ணீர் வீணாவதை தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை