மேலும் செய்திகள்
இளைஞரிடம் வழிப்பறி
14-Dec-2024
திருத்தணி:திருவாலங்காடு ஒன்றியம், தாழவேடு ஊராட்சியில், சமத்துவபுரம் பகுதியில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியினர் வசதிக்காக, சமத்துவபுரம் நுழைவாயில் அருகே பூங்கா மற்றும் குழந்தைகள் விளையாடுவதற்கு வசதியாக விளையாட்டு கருவிகள் ஊராட்சி நிர்வாகம் ஏற்படுத்தி பயன்பாட்டிற்கு விடப்பட்டது. மேலும், ஆண்டுதோறும், பூங்கா பராமரிப்பு செலவிற்காக கணிசமான தொகை ஒன்றிய நிர்வாகம் ஊராட்சிக்கு ஓதுக்கீடு செய்கிறது.ஆனால், சில ஆண்டுகளாக ஊராட்சி நிர்வாகம் சமத்துவபுரம் பூங்காவை முறையாக பராமரிக்காததால் முட்புதர் மற்றும் செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. இதுதவிர விளையாட்டு உபகரணங்களும் பழுதாகியுள்ளன. இதனால் குழந்தைகள் பூங்காவிற்கு வந்து ஏமாற்றுத்துடன் திரும்பிச் செல்கின்றனர். மேலும், அரசு பணம் வீணாகிறது.எனவே, மாவட்ட நிர்வாகம், தாழவேடு சமத்துவப்புரம் பூங்கா மற்றும் விளையாட்டு உபகரணங்கள் சீரமைக்க வேண்டும் என, அப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.
14-Dec-2024