உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சேதமடைந்த சிறுவாபுரி சாலை

சேதமடைந்த சிறுவாபுரி சாலை

கும்மிடிப்பூண்டி:சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு, செவ்வாய், ஞாயிறு, விசேஷ மற்றும் விடுமுறை நாட்களில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.சிறுவாபுரி கோவிலை இணைக்கும், புதுரோடு சந்திப்பு முதல், அகரம் சந்திப்பு வரையிலான, ஆறு கிலோ மீட்டர் சாலை, மாநில நெடுஞ்சாலை துறையினர் பராமரிப்பில் உள்ளது.அதில், அகரம் சந்திப்பு முதல், சிறுவாபுரி வரையிலான மூன்று கிலோ மீட்டர் சாலை, மழைக்கு சேதமடைந்து படுமோசமான நிலையில் உள்ளது.சாலை நெடுகிலும், பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துடன் சென்று வருகின்றனர். எனவே, அந்த சாலையை சீரமைக்க வேண்டும் என, சிறுவாபுரி பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி