உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  தடையை மீறி தரைப்பாலத்தில் செல்லும் வாகனங்களால் அபாயம்

 தடையை மீறி தரைப்பாலத்தில் செல்லும் வாகனங்களால் அபாயம்

பள்ளிப்பட்டு: தரைப்பாலத்தில் பயணிக்க வேண்டாமென, தடை செய்தும், தடையை மீறி வாகனங்கள் பயணித்து வருவதால் அபாயம் ஏற்பட்டுள்ளது. பள்ளிப்பட்டு அருகே உருவாகும் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் வழியாக ஆந்திர மாநிலம், நகரிக்கு ஏராளமானோர் பயணிக்கின்றனர். பொதட்டூர்பேட்டையில் இருந்து நகரி செல்வதற்காக விரைவு சாலையாக நெடியம் பாலம் அமைந்துள்ளது. இந்த பாதையை தவிர்த்து பள்ளிப்பட்டு வழியாக பயணித்தால், 10 கி.மீ., சுற்றிக்கொண்டு வர வேண்டிய நிலை உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் நெடியம் பாலத்தின் மையப்பகுதி இடிந்து விழுந்தது. இடிந்து கிடக்கும் இந்த பாலம் இதுவரை சீரமைக்கப்படவில்லை. இதனால், இந்த பாலத்தின் வழியாக பயணிக்க வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பாலத்தின் குறுக்கே கான்கிரீட் இடிபாடுகளை கொட்டி தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், அதையும் தாண்டி வாகன ஓட்டிகள் பாலத்தில் பயணிக்கின்றனர். விபரீதம் ஏற்படும் முன், பாலத்தை உறுதியாக சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ