உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தானியங்கி சிக்னல் கம்பம் உடைந்து விழும் அபாயம்

தானியங்கி சிக்னல் கம்பம் உடைந்து விழும் அபாயம்

திருத்தணி:திருத்தணி நகராட்சியில் ம.பொ.சி.சாலை, அரக்கோணம் சாலை, சித்துார் சாலை மற்றும் பைபாஸ் சாலை ஆகிய பகுதிகளில் அதிகளவில் போக்குவரத்து செல்வதால் நெரிசல் மற்றும் விபத்துக்கள் நடக்கிறது. இதை தடுக்கும் வகையில் திருத்தணி போக்குவரத்து போலீசார் சார்பில் மேற்கண்ட பகுதிகளில் தானியங்கி சிக்னல் கம்பம் அமைத்து, வாகன ஓட்டிகளுக்கு வழிமுறை காட்டி செல்வதற்கு அனுமதிக்கப்படுகிறது. இந்நிலையில், சிக்னல் கம்பங்களை முறையாக போலீசார் பராமரிக்காததால் தற்போது கம்பங்கள் சேதமடைந்துள்ளன. திருத்தணி ம.பொ.சி. சாலை, பாரத ஸ்டேட் வங்கி திரும்பு வளைவில் அமைக்கப்பட்ட சிக்னல் கம்பம் சாய்ந்துள்ளது. மேலும் சிக்னல் விளக்குகள் பழுதடைந்ததால், வாகன ஓட்டிகள் செல்வதற்கு கடும் சிரமப்படுகின்றனர்.பலத்த காற்று வீசினால், சிக்னல் கம்பம் உடைந்து சாலையில் விழும் அபாயம் உள்ளது. மேலும் அப்பகுதியில், 24 மணி நேரமும் வாகனங்கள் சென்றவாறு இருப்பதால் வாகன ஓட்டிகளுக்கும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து சாலையோரம் சாய்ந்துள்ள சிக்னல் கம்பத்தை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் எதிர்பார்கின்றனர்.★★


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை