உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கும்மிடி ரயில்வே சுரங்க பாதை ஒரு மாதம் மூட முடிவு

கும்மிடி ரயில்வே சுரங்க பாதை ஒரு மாதம் மூட முடிவு

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி நகரையும், சிப்காட் பகுதியையும் இணைக்கும் ரயில்வே சுரங்க பாதை, சீரமைப்பு பணிக்காக ஒரு மாதம் மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் அருகே நகரையும் சிப்காட் வளாகத்தையும் இணைக்கும் ரயில்வே சுரங்க பாதை உள்ளது. அந்த சுரங்க பாதை வழியாக, தினசரி பல்லாயிரக்கணக்கான வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் கடந்து வருகின்றனர். கடந்த நான்கு ஆண்டு காலமாக, சுரங்க பாதையில் தண்ணீர் கசிவு ஏற்பட்டு, எப்போதும் தண்ணீர் தேங்கி நிற்கும். பலவீனமாக உள்ள சுரங்க பாதையில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள, வரும் 10ம் தேதி முதல் டிசம்பர் 9ம் தேதி வரை ஒரு மாதம் மூட இருப்பதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்திருந்தது. இதன் மீதான பேச்சு கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தில் நேற்று நடந்தது. ரயில்வே நிர்வாகம் மற்றும் கும்மிடிப்பூண்டி பேரூராட்சி நிர்வாக அலுவலர்கள் பங்கேற்றனர். கூட்ட முடிவில், 'சுரங்க பாதையை உடனடியாக மூடுவதால் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன. மேலும் வேறு சில சீரமைப்பு பணிகள் இருப்பதால், நாளை அனைத்து துறையினரும் கள ஆய்வு செய்து, மூடப்படும் தேதியை பின் முடிவு செய்யலாம். தேதி முடிவானதும், மக்கள் பார்வைக்கு சுரங்கபாதையின் இரு முனையிலும், ஒரு மாத காலம் சுரங்க பாதை மூடப்படும் அறிவிப்பு பேனர் வைக்க வேண்டும்' என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை