மேலும் செய்திகள்
அரசு கலை கல்லுாரி பட்டமளிப்பு விழா
25-Oct-2025
திருத்தணி: திருத்தணி அரசு கலைக்கல்லுாரியில் ஆழ்துளை கிணறு மற்றும் பைப் லைன் அமைக்கும் பணி நடந்தது. சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் இயங்கி வரும் அரசு கலைக் கல்லுாரியில், இளங்கலை, முதுகலை படிப்புகளில், 3,200 மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர். இந்நிலையில், கல்லுாரியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாமலும், குடிநீர் பிரச்னையாலும் மாணவ - மாணவியர் சிரமப்பட்டு வருகின்றனர். இதையடுத்து, கலெக்டர் விருப்ப நிதியில் இருந்து, 20 லட்சம் ரூபாய் ஒதுக்கி, புதிய ஆழ்துளை கிணறு மற்றும் குடிநீர் குழாய் அமைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, கல்லுாரியில் புதிய ஆழ்துளை கிணறு, குடிநீர் கொண்டு செல்வதற்கு குழாய் அமைக்கும் பணிகளை, திருத்தணி தி.மு.க.,- எம்.எல்.ஏ., சந்திரன், நேற்று துவக்கி வைத்தார்.
25-Oct-2025