அரக்கோணம் ஐ.என்.எஸ்., ராஜாளியில் பாதுகாப்பு செயலர் கலந்துரையாடல்
அரக்கோணம், ராணிபேட்டை மாவட்டம், அரக்கோணம் ஐ.என்.எஸ்., ராஜாளி கடற்படை தளத்திற்கு மத்திய பாதுகாப்பு துறை செயலர்ராஜேஷ் குமார் சிங், நேற்று ஆலோசனை செய்தார்.அவரை ஐ.என்.எஸ்., ராஜாளி கடற்படை கமோ டர் கபில் மேத்தா வரவேற் றார்.இந்தியப் பெருங்கடல் பகுதியில் கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்வதில் தயார்நிலை மற்றும் அதன் பங்கு ஆகியவற்றையும் தளத்தில் உள்ள பல்வேறு செயல்பாட்டு வசதிகளையும் பார்வையிட்டார்.அப்போது, அவருக்கு கமோடர் கபில் மேத்தா, ஐ.என்.எஸ்., ராஜாளி விமான தளத்தின் செயல்பாடுகள் குறித்தும், மேற்கொள்ளப்பட்ட விரிவான செயல்பாடுகள், வளர்ந்து வரும் பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் திறன் குறித்தும் விளக்கினார்.இதைத் தொடர்ந்து பாதுகாப்பு துறை செயலர் ராஜேஷ் குமார் சிங் ஐ.என்.எஸ்., ராஜாளியில் உள்ள வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுடன் கலந்துரையாடினார்.அப்போது, தேசிய கடல்சார் நலன்களைப் பாதுகாப்பதில் வீரர்களின் அர்ப்பணிப்பு மற்றும் பங்களிப்பு குறித்து பாராட்டியும், புவிசார் அரசியல் நிலப்பரப்பின் மாறும் சவால்களை எதிர் கொள்வதற்காக உயர்மட்ட போர் தயார் நிலை மற்றும் செயல்பாட்டு விழிப்புணர்வை பராமரிப்பதன் முக்கியத்துவத்தையும் வீரர்களுக்கு எடுத்துரைத்தார்.இதில் ஐ.என்.எஸ்., ராஜாளி கடற்படை தளத்தின் உயரதிகாரிகள் உட்படபலர் உடனிருந்தனர்.