உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / 24ல் நலத்திட்ட உதவி வழங்கல் துணை முதல்வர் பங்கேற்பு

24ல் நலத்திட்ட உதவி வழங்கல் துணை முதல்வர் பங்கேற்பு

திருவள்ளூர்: சுந்தரசோழபுரத்தில் நலத்திட்ட உதவி வழங்க, வரும் 24ம் தேதி துணை முதல்வர் உதயநிதி வருகையையொட்டி இடம் தேர்வு செய்யப்பட்டது. ஆவடி தொகுதிக்கு உட்பட்ட திருவேற்காடு நகராட்சி சுந்தரசோழபுரம் பகுதியில், பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை துவக்கி வைத்தல் மற்றும் அடிக்கல் நாட்டு விழா, வரும் 24ம் தேதி நடைபெற உள்ளது. நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி பங்கேற்க உள்ளார். இதையடுத்து, சுந்தரசோழபுரம் பகுதியில் தேர்வு செய்யப்பட்ட இடத்தை, சிறுபான்மை நலத்துறை அமைச்சர் நாசர், கலெக்டர் பிரதாப் ஆகியோர் பல்வேறு துறை அலுவலர்களுடன் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். ஆவடி மாநகராட்சி மேயர் உதயகுமார், மாநகராட்சி கமிஷனர் சரண்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ