திருத்தணி ஒன்றியத்தில் ரூ.1.55 கோடியில் வளர்ச்சி பணி
திருத்தணி:திருத்தணி ஒன்றியத்தில் 27 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் 2021-22ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும், குறைந்த பட்சம் 5 ஊராட்சிகள் தேர்வு செய்து அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், மழைநீர் வடிகால்வாய், சாலைகள், ஊராட்சி மன்ற அலுவலகம், அங்கன்வாடி மையம் கட்டுதல் மற்றும் குடிநீர் போன்ற பணி மேற்கொள்ளபடுகிறது.அந்த வகையில், 2025- 26ம் ஆண்டு அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-2 ன் கீழ் சத்ரஞ்செயபுரம், சின்னகடம்பூர், கன்னிகாபுரம், மத்துார் மற்றும் டி.சி.கண்டிகை ஆகிய ஐந்து ஊராட்சிகளில் சிமென்ட் சாலை, கதிரடிக்கும் நெற்களம், பொதுவினியோக விற்பனை நிலையம், அங்கன்வாடி மையம் மற்றும் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டுதல் போன்ற பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக 1.55 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து டெண்டர் விடப்பட்டது. வளர்ச்சி பணிகள் துவங்கி நடந்து வருகின்றன.