உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருத்தணி கோவிலில் குவிந்த பக்தர்கள்

திருத்தணி கோவிலில் குவிந்த பக்தர்கள்

திருத்தணி,:திருத்தணி முருகன் கோவிலுக்கு, தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர்.கடந்த 18ம் தேதி புனித வெள்ளி, நேற்று முன்தினம் சனிக்கிழமை மற்றும் நேற்று ஞாயிற்றுக்கிழமை என, தொடர்ந்து மூன்று நாட்கள் அரசு விடுமுறை என்பதால், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலில் அதிகாலை முதலே குவிந்தனர். சில பக்தர்கள் காவடிகள் எடுத்து மூலவரை தரிசித்தனர்.பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்ததால், பொது வழியில் மூலவரை தரிசிக்க, இரண்டு மணி நேரத்திற்கு மேல் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அதேபோல், 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள், ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் வரிசையில் காத்திருந்து மூலவரை வழிபட்டனர்.முன்னதாக, நேற்று அதிகாலை 5:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்கவேல், தங்ககிரீடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை