உள்ளூர் செய்திகள்

 டீசல் திருட்டு

ஊத்துக்கோட்டை: மொபைல் போன் டவர் ஜெனரேட்டர் அறையில் டீசல் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை, ஈக்காடுதாங்கல் பகுதியில் வசித்து வருபவர் சுதாகர், 43. இவர் வெங்கல் அடுத்த கரிக்கலவாக்கம், பாகல்மேடு ஆகிய பகுதிகளில் தனியார் மொபைல் போன் டவரை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். நேற்று முன்தினம் மேற்கண்ட பகுதிகளில் உள்ள டவர்களில், ஜெனரேட்டர் அறைகளில் வைத்திருந்த தலா, 50 லிட்டர் கேன்களில் இருந்த டீசல் மாயமானது. மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து சுதாகர் கொடுத்த புகாரின்படி வெங்கல் போலீசார் வழக்கு பதிந்து டீசல் திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை