உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கும்மிடி ஐ.டி.ஐ.,யில் நேரடி மாணவர் சேர்க்கை

கும்மிடி ஐ.டி.ஐ.,யில் நேரடி மாணவர் சேர்க்கை

கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி அரசினர் ஐ.டி.ஐ.,யில் நேரடி மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில் அரசினர் ஐ.டி.ஐ., இயங்கி வருகிறது. குளிர்சாதன டெக்னீஷியன், மெக்கானிக், சர்வேயர், இன்-ப்ளான்ட் லாஜிஸ்டிக்ஸ் அசிஸ்டன்ட் ஆகிய நான்கு தொழிற் பிரிவுகளில் அங்கு பயிற்சி வழங்கப்படுகிறது.பயிற்சி காலத்தில் ஊக்கத்தொகை மட்டுமின்றி மிதிவண்டி, மடிக்கணினி, சீருடை, காலணிகள், பாட புத்தகங்கள், வரைபட உபகரணங்கள் உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடிந்ததும் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, கடந்த 13ம் தேதியுடன் முடிவடைந்தது. தற்போது காலியாக உள்ள இடங்களுக்கு நேரடி மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.நேரடி சேர்க்கைக்கு வரும் மாணவர்கள், தேவையான ஆவணங்கள் கொண்டுவர வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை