உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  லாரி மோதி விபத்து :மாற்றுத்திறனாளி பலி

 லாரி மோதி விபத்து :மாற்றுத்திறனாளி பலி

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே லாரி மோதியதில், நடந்து சென்ற மாற்றுத்திறனாளி உயிரிழந்தார். கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் அருகே, பாட்டைகுப்பம் மீனவ கிராமத்தில் வசித்தவர் செல்வம், 46; மாற்றுத்திறனாளி. நேற்று காலை, சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஆரம்பாக்கம் பஜார் பகுதியில் நடந்து சென்றார். அப்போது, ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி சென்ற லாரி, அவர் மீது மோதியது. இதில், லாரியின் முன் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி உயிரிழந்தார். ஆரம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை